உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உட்பட பல வெற்றி படங்களை டைரக்டு செய்தவர் சுந்தர்.சி. இவர் சென்ற 2006-ம் வருடம் வெளியாகிய “தலைநகரம்” படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கி இருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தலைநகரம் படத்தின் 2-ஆம் பாகம் உருவாவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்திலும் சுந்தர்.சி நாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வி.இசட்.துரை இயக்குகிறார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இப்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.