தமிழில் பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள கிருபா (94) வயது மூப்பு காரணமாக தற்போது உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு கமல் தனது ட்வீட்டில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘1962ல் சண்டைக் கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கிய கிருபா 40 படங்களுக்கு மேல் என்னுடன் பணியாற்றியுள்ளார். அவரை வணங்கி வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். இவரது மரணம் தமிழ் சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.