பிரபாஸ் நடிப்பில் இம்மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள படம் ஆதிபுருஷ்.   ஆதிபுருஷ் ரிலீஸாகும் அனைத்து தியேட்டர்களிலும் அனுமனுக்கு ஒரு டிக்கெட் ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து அனுமன் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என முன்னதாக வதந்திகள் பரவியது. அனுமன் இருக்கைக்கு அருகில் அமர எந்த கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என இந்த வதந்திக்கு படக்குழு தற்போது முற்றுப்புள்ளி வைத்தது.

இந்நிலையில் படம் வெளியாகும் ஒவ்வொரு தியேட்டரிலும் 1 இருக்கை அனுமனுக்கு ஒதுக்கப்படும் என படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து கம்மம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ராமர் கோயிலுக்கும் 101 டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என ஷ்ரேயாஸ் மீடியாவின் தலைவர் ஸ்ரீனிவாஸ் தற்போது அறிவித்துள்ளார்.