ஸ்ரீநகரில் உள்ள எஸ்.எம்.எச்.எஸ். மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை நோயாளியின் உறவினர் தாக்கிய சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக, ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரி (GMC) மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இத்தகவலை ஜம்மு காஷ்மீர் நியூஸ் சர்வீஸ் (JKNS) வெளியிட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரிந்த தகவலின்படி, ஜிஎம்சியில் 3வது ஆண்டு முதுகலை மருத்துவ மாணவரான ஷாநவாஸ், எஸ்எம்எஎச்.எஸ். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த போது, ஒரு நோயாளியின் உறவினரால் தாக்கப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் வைரலாகும் நிலையில், குற்றவாளி மருத்துவமனையின் நெரிசலான பகுதியில் நுழைந்து, டாக்டரைக் கடுமையாக அடித்து தரையில் வீழ்த்தியதும், அதை பார்த்து மக்கள் கூடியதும் பதிவாகியுள்ளது.
RDA GMC Jammu strongly condemns the shocking incident at SMHS Hospital Srinagar, where a resident doctor on duty was slapped by an attendant today. We stand in unwavering solidarity with our colleagues at RDA GMC Srinagar and demand strict action against the culprit. pic.twitter.com/ZwsLQ2Htw5
— RDA_GMC_JMU (@GmcJmu) July 23, 2025
“>
இந்த கொடூர சம்பவம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் குழு ஒன்று, “மக்களுக்கு சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம், ஆனால் அடிக்கடி எங்கள் மீதான தாக்குதல்கள் நடக்கின்றன. இது சகிக்க முடியாதது. பாதுகாப்பும் மரியாதையும் எங்களுக்கு வேண்டும்” என வலியுறுத்தினர். சம்பந்தப்பட்ட நபரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
