ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக பேரம் பேசும் ஆடியோ கிடைத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். தனது X பக்கத்தில், பாஜகவினர் எங்கள் எம்.எல்.ஏக்கள் 7 பேரிடம் ‘கெஜ்ரிவாலை நாங்கள் கைது செய்து எம்எல்ஏ.க்களை பிரிப்போம்.

21 எம்எல்ஏக்களிடம் பேசியுள்ளோம். நீங்களும் வரலாம். ரூ. 25 கோடி வழங்கப்படும்’ என்று கூறும் ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. அரசை கவிழ்க்க பாஜக செய்யும் தந்திரம் எங்களிடம் எடுபடாது என்று பதிவிட்டுள்ளார்.