தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு குறித்து, அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

​பொதுநிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது வேறு எந்த ஆட்சியும் இல்லை, அது அச்சுபிசகாமல் அப்படியே அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சிதான் நடக்கிறது” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

​மேலும் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜயின் நிர்வாகத் திறன் குறித்துப் பேசிய அவர், “எங்கள் தலைவர் விஜய் அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியிலும், புரட்சித் தலைவி அம்மாவின் தைரியமான முடிவுகளின் அடிப்படையிலும் பயணித்து, மக்களுக்கு எப்போதும் ஒரு மிகச்சிறந்த, நேர்மையான நிர்வாகத்தைத் தருவார்” என்று மிக அழுத்தமாகக் கூறினார்.

​எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயரைச் சுட்டிக்காட்டி, தவெக ஆட்சியை அம்மாவின் ஆட்சியோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒப்பிட்டுப் பேசியிருப்பது, அரசியல் களத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.