கோடைகாலம் வந்துவிட்டது. இந்த நேரத்தில் வெயிலுக்கு இதமாக ஏதாவது சாப்பிட நினைப்போம். அந்தவகையில் தர்பூசணி பழம் சாப்பிட நிறைய பேருக்கு பிடிக்கும். இதில் நீர்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.  இது சிவப்பு நிறமாக இருக்கும். ஆனால், ஒரு சில கடைகளில் பழத்தை சிவப்பு நிறமாக மாற்ற ஊசி மூலம் சாயம் ஏற்றப்படுகிறது.

இது குறித்த விழிப்புணர்வு வீடியோவில், பெண் ஒருவர் 2 வெவ்வேறு தர்பூசணி பழங்களை வெட்டி, அதில் வெள்ளை நிற டிஷு பேப்பரை சிறிது நேரம் வைத்து எடுக்கிறார். அப்போது ஒரு பழத்தில் மட்டும் சாயம் இருப்பது தெரிய வருகிறது.