திருச்சியில் வரும் 22 ஆம் தேதி பரப்புரையை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு. முக ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரங்களை திமுக தெரிவித்துள்ளது. திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். கழகத் தலைவர் அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வருமாறு.

தேதி                                                 நாடாளுமன்ற தொகுதி 

22/03/ 2024 (வெள்ளிக்கிழமை) – திருச்சி, பெரம்பலூர்

23/03/2024 (சனிக்கிழமை) – தஞ்சை, நாகை

25/03/2024 (திங்கட்கிழமை) – கன்னியாகுமரி, திருநெல்வேலி

26/03/2024 (செவ்வாய்க்கிழமை) – தூத்துக்குடி, ராமநாதபுரம்

27/03/2024 (புதன்கிழமை) – தென்காசி, விருதுநகர்

29/03 /2024 (வெள்ளிக்கிழமை) தர்மபுரி, கிருஷ்ணகிரி

30/03/2024 (சனிக்கிழமை) – சேலம், கிருஷ்ணகிரி

31/03/2024 (ஞாயிற்றுக்கிழமை) – ஈரோடு, நாமக்கல், கரூர்

02/04/2024 (செவ்வாய்க்கிழமை) – வேலூர், அரக்கோணம்

03/04/2024 (புதன்கிழமை) – திருவண்ணாமலை, ஆரணி

05/04/2024 (வெள்ளிக்கிழமை) – கடலூர், விழுப்புரம்

02/04/2024 (சனிக்கிழமை) – சிதம்பரம், மயிலாடுதுறை

07/04/2024 (ஞாயிற்றுக்கிழமை) – புதுச்சேரி

09/04/2024 (செவ்வாய்க்கிழமை) – மதுரை, சிவகங்கை

10/04/2024 (புதன்கிழமை) – தேனி, திண்டுக்கல்

12/04/2024 (வெள்ளிக்கிழமை) – திருப்பூர், நீலகிரி

13/04/2024 (சனிக்கிழமை) – கோவை, பொள்ளாச்சி

15/04/2024 (திங்கள்கிழமை) –  திருவள்ளூர், வடசென்னை

16/04/2024 (செவ்வாய்க்கிழமை) – காஞ்சிபுரம், திருபெரும்புதூர்

17/04/2024 (புதன்கிழமை) – தென் சென்னை, மத்திய சென்னை

குறிப்பு :

“மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பிரச்சாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் கழகத் தோழர்கள், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாம் என கண்டிப்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/arivalayam/status/1770447604608041216