ஒரு காபி விலை 199 ரூபாய் என்று அச்சிடப்பட்ட மெனு கார்டு இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. சென்னை விமான நிலையத்தில் இயங்கும் அடையார் ஆனந்த பவன் ஹோட்டலின்  மெனு கார்டு தான் இது. விமான நிலையத்திற்குள் இடத்திற்கான வாடகை அதிகம் என்பதால் உணவகங்கள் அதிக விலையை நிர்ணயிப்பது வழக்கம் தான். ஆனால் தயிர் சாதம் 290 ரூபாய், இட்லி 250 ரூபாய், சப்பாத்தி 350 ரூபாய், பொங்கல் 290 ரூபாய் என வெளியிடப்பட்டுள்ள விலை பட்டியல் காண்பவரை மலைக்க வைக்கிறது.