
ஒவ்வொரு நாள் விடியலும் நமக்கு ஒரு புதிய புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் அந்த நாள் எப்படி அமையும் என்பது குறித்து பலவித எதிர்பார்ப்புகள் இருக்கும். இதனால் நாம் காலையில் எழுந்தவுடன் சில விஷயங்களை செய்யக்கூடாது என சொல்லப்படுகிறது. முதலில் காலையில் எழுந்ததும் போன் பார்ப்பதை தவிர்க்கவும். ஏனென்றால் அதில் வரும் அதிர்ச்சி தரும் செய்திகளை பார்த்தால் உடலுக்கும் மனதிற்கும் சோர்வை ஏற்படுத்தும்.
மேலும் இதன் தாக்கம் அன்றைய நாள் முழுவதும் தொடரும். அது உங்களின் முழு நாளையும் பாதிக்கும். இது நாம் வேலை பார்க்கும் இடத்தில் அல்லது முக்கியமாக வெளியே செல்லும் இடத்தில் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுதல், கோபம் கொள்ளுதல் என அந்நாள் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தும்.
எனவே மக்களை அனுசரித்து செல்ல வேண்டும். அதுபோல காலையில் தினமும் எழுந்தவுடன் நெருப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள், தீ விபத்து போன்றவற்றை பார்க்காமல் தவிர்க்க வேண்டும். எனவே காலையில் எழுந்தவுடன் போனில் இதுபோன்ற தேவையில்லாத விஷயங்களை பார்க்க கூடாது என சொல்லப்படுகிறது.