ஒரு சிலர் தினமும் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதேபோல் நடை பயிற்சி முடிந்தவுடன் எண்ணை பலகாரங்கள் மற்றும் டீ, காபி சாப்பிடும் பழக்கத்தையும் வைத்துள்ளார்கள். ஆனால் அப்படி செய்வதால் நடைப்பயிற்சி செய்வதற்கான எந்த பயனும் கிடைக்காது என சொல்லப்படுகிறது. நடைப்பயிற்சிக்கு பின் எண்ணை பலகாரங்கள், நொறுக்கு தீனிகள், வடை போன்றவற்றை நிச்சயம் சாப்பிடக்கூடாது. அப்படி செய்தால் நடைபயிற்சியினால் கிடைத்த பலன்கள் கிடைக்காமல் போய்விடும்.

மேலும் உடலில் அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. எண்ணை பலகாரங்களுக்கு பதில் பாசிப்பயறு, வேக வைத்த கொண்டை கடலை, கேழ்வரகு கஞ்சி ஆகியவற்றை சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. உடற்பயிற்சி செய்தவுடன் பசிப்பது போல் உணர்ச்சி ஏற்படும் ஆனால் அதற்காக என்னை பலகாரங்களை சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது.