ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி, பலத்த தடைகளையும் நெட்டிசன்களின் நெகட்டிவ் விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கி தியேட்டர்களில் தற்பொழுது மாஸ் காட்டி வரும் ‘கருப்பு’ திரைப்படத்திற்கு ஆதரவளித்த தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சூர்யா தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ள நிலையில், அவர் ரசிகர்களுக்கு விடுத்துள்ள ஒரு எமோஷனல் ‘பகீர்’ வேண்டுகோள் சோசியல் மீடியாவில் பயங்கர விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தியேட்டர்களில் ‘கருப்பு’ படத்தைப்பார்த்து சாமியாடி, உணர்ச்சிவசப்பட்டு பரவசமடையும் ரசிகர்களுக்குத் தியேட்டர் ஊழியர்கள் உடனடியாக முதலுதவி வழங்கி உதவ வேண்டும் என்று உருகியுள்ள சூர்யா, “தயவுசெஞ்சு அந்த இக்கட்டான நேரத்தில் மனிதாபிமானமே இல்லாம மற்றவர்கள் அதை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என்று தனது #AnbaanaFans ஹாஷ்டேக் மூலம் மிகவும் உருக்கமாகவும், அதேசமயம் கொஞ்சம் கண்டிப்போடும் கேட்டுக்கொண்டுள்ளார்.

“>