“தம்பி கடல்ல இறங்காதீங்கப்பா.. ஆபத்து!” என்று மனிதாபிமானத்துடன் எச்சரித்த சுற்றுலா காவலரை, சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தினர் சரமாரியாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி கடற்பகுதியில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர், கடலில் இறங்க முயன்ற இளைஞர்களைத் தடுத்து எச்சரித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்தச் சுற்றுலாப் பயணிகள், காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஒரு கட்டத்தில் அந்த இடத்திலேயே அவரைச் சூழ்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த மற்ற சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

“>

 

தகவலறிந்து வந்த சக போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்புக்காகச் சொல்லப்படும் அறிவுரைகளைக் கூட மதிக்காமல், சட்டத்தைக் கையில் எடுத்த இந்தச் சுற்றுலா குடும்பத்தின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.