தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ப. ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கில் ஸ்டண்ட் செய்யும் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்களுக்காக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு அதிரடியான முடிவு எடுத்துள்ளார்.
அதாவது மோகன்ராஜ் மரணத்தை தொடர்ந்து ஸ்டண்ட் கலைஞர்கள் 650 பேருக்கு அக்ஷய் குமார் இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளார். இதன் மூலம் ஸ்டண்ட் மாஸ்டர்கள் விபத்தில் சிக்கினால் 5.5 லட்சம் வரை சிகிச்சை பெறுவதற்காக இலவசமாக இன்சூரன்ஸ் பெற்றுக் கொள்ளலாம். நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் வெளியான கண்ணப்பா திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அக்ஷய் குமாருக்கு தற்போது பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
