முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் திரைப்படம் தயாராகி கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை நீளம் ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் விழுந்தமாவடி கிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சண்டை கலைஞரான மோகன் ராஜ் என்பவர் ஒரு காட்சியை படமாக்கி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் வேட்டுவம் படபிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்ததை அடுத்து 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு நடிகர் அக்ஷய்குமார் இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டருக்கு விபத்து ஏற்படும் பட்சத்தில் இந்த இன்சூரன்ஸ் மூலம் 5.5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும்.
