“தமிழ்நாட்டை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் மாறி மாறி ஆள வேண்டும்!” என்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கடலூரில் செய்தியாளர்களிடம் அதிரடியாகப் பேட்டி அளித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் சும்மா தீயாய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நிருபர்களைச் சந்தித்த அவர், டெல்லியில் இருக்கும் சில கட்சிகள் அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி ஒழிக்க வேண்டும் என்ற நீண்ட கால திட்டத்தோடு காய் நகர்த்தி வருவதாகவும், பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை ஆசைவார்த்தை கூறி ராஜினாமா செய்ய வைப்பது தான் தூய அரசியலா என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அ.தி.மு.க.வை தொடர்ந்து தற்போது தி.மு.க.வையும் தனிமைப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழிப்பதே டெல்லி சக்திகளின் மாஸ்டர் பிளான் என்றும், இன்றைய சூழலில் தி.மு.க.வைக் காப்பாற்றுவது தமிழ்நாட்டில் இருக்கும் ஜனநாயக சக்திகளின் முக்கிய கடமை என்றும் த்ரில்லிங் ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
திராவிட இயக்கங்களை அழிக்க நடக்கும் இந்தச் சதிகளைத் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என அவர் விடுத்துள்ள இந்த அதிரடி அறிக்கை, தற்போதைய அரசியல் களத்தில் அனலைக் கூட்டியுள்ளது.
