
தமிழக அரசியலில் எல்லா தலைவர்களையும் சமமாக விமர்சித்துக் கொண்டிருப்பவர் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருடைய பெயர் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. தமிழக அரசியலில் சீமான் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவே இருந்து வருகிறார். சமீப காலமாக பெரியார் தொடர்பாக சீமான் தெரிவித்து வரும் கருத்துக்கள் அனைத்தும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இப்படியான நிலையில் சீமானின் இந்த பேச்சு குறித்து பேசி உள்ள ரங்கராஜ் பாண்டே, தமிழ்நாட்டில் சீமானை போல் பேசுவதற்கு ஒரு அரசியல் தலைவர் கூட கிடையாது. அவருடைய நினைவுத்திறன், மேற்கோள் பேச்சு, தைரியம் என அனைத்திலும் அவருக்கு நிகராக பேசக்கூடிய ஒரு அரசியல் தலைவர் யாருமே இல்லை. அவர் பேசக்கூடிய வார்த்தைகள் அனைத்துமே மீடியாக்களுக்கு ஒரு நல்ல கன்டென்ட். லைட்டா பேசினா கூட அப்படியே பொறிந்து தள்ளிடுவாரு என்று ரங்கராஜ் பாண்டே சீமான் பற்றி பேசியுள்ளார்.