தமிழகத்தில் கடந்த 18 நாட்களில் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முறைப்படி மருத்துவம் படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதேனும் மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து அதனால் கிடைக்கும் அனுபவ அடிப்படையில் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி, கடந்த 18 நாட்களில் நடத்திய சோதனையில் தமிழ்நாடு முழுவதும், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்த 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.