கள்ளக்குறிச்சி, வடதொரசலூரில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குடிநீரில் கால்நடை தொற்று ஏற்பட்டு, வாந்தி, மயக்கத்துடன் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், யாருக்காவது அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையை அணுகவும்.

எலிக்காய்ச்சல் ஆனது பக்ரீரியா எனும் நுண்ணுயிர் வகையை சேர்ந்த ஒரு கிருமியால் உருவாகிறது. இந்த கிருமி தொற்றிய எலிகளின் சிறுநீர் மூலமாகவே அந்த பக்ரீரியா வெளிச்சூழலுக்கு வந்து சேர்கிறது. இவ்வாறு வெளியேறிய பக்ரீரியாவானது வயல்கள், குளம், குட்டைகளில் தேங்கியுள்ள நீரிலேயே தங்கிவிடுகிறது. இதனால், சிறிய காயங்களுடன் வயல்களில் வேலை செய்யும்போதும், குளம், குட்டைகளில் குளிக்கும்போதும் மனித உடலுக்குள் நுழைந்துவிடுகிறது.