தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (18.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே அரசூர், ஆச்சாள்புரம், எடமணல், திருவெண்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அரசூர், ஆச்சாள்புரம், எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை, புத்தூர், வடரெங்கம், அகனி, குன்னம், கொள்ளிடம், அணைக்காரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார் புதுப்பட்டிணம், பழையபாளையம், மாங்கனாம்பட்டு, திருவெண்காடு, மேலையூர், மங்கைமடம், பூம்புகார், மேலச்சாலை, நாங்கூர், திருவாலி, திருநகரி, பெருந்தோட்டம், அண்ணன் பெருமாள் கோவில் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

மதுரை: பெருங்குடி பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாப்பாகுடி, டிமார்ட் அருகில், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், போஸ்டல் டிரெய்னிங் கல்லூரி, காவலர் குடியிருப்பு, ஏர் போர்ட் குடியிருப்பு, குறங்குத்தோப்பு, ஆண்டவர்நகர் பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

சேலம்: வேம்படிதாளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இளம்பிள்ளை நகர், காந்தி நகர், தப்ப குட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீர காப்பாடி, பொதியன் காடு, கோத்துப்பாலிக்காடு, அரி யாம்பாளையம், மலங்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

திருப்பூர்: பல்லடம் பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பனப்பாளையம், மாதப்பூர், கணபதிபாளையம், குங்குமம் பாளையம், சிங்கனூர், பெத்தாம்பாளையம், நல்லா கவுண்டம்பாளையம், மாதேஸ்வரன் நகர், ராயர்பாளையத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படும்.