தமிழகத்தில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளதாக மக்களவையில் தகவல் வெளியாகி உள்ளது. இதை எம்.பி டி.ரவிகுமார் கேள்விக்கானப் பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். அதாவது நாடளுமன்றத்தில், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், தமிழ்நாட்டில் உள்ள குடிசை வீடுகள் குறித்து கேள்வியெழுப்பினார்.

இதற்கு இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த பதிலில், தமிழ்நாட்டில் சுவர், கூரை கொண்டு தற்காலிகமாக 3,71.382 வீடுகள், சேறு, மூங்கில் கொண்டு 4,45,459 வீடுகள், கீற்று, இலை, தழை கொண்டு கூரை வீடுகள் 18,63,373, குடிசை வீடுகள் 26,80,214 உள்ளதாக தெரிவித்துள்ளார்.