தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் ரேஷன் கடைகள் மூலம் அடுத்த வாரம் முதல் இந்த பணம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் நிவாரணத் தொகையை வழங்குவதற்கு முன்பு மக்கள் சிரமம் இல்லாமல் வந்து செல்ல ரேஷன் கடைகளில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளில் டோக்கன் வழங்குவது மற்றும் நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் தினமும் ஒரு கடையில் 100 முதல் 150 பேருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். நிவாரண தொகை தொடர்பாக புகார்களை பெறுவதற்கு தனி கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும் எனவும் இந்த பணிகளை கண்காணிக்க தனி குழுக்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.