“தமிழ்நாடுதான் விஜய்.. விஜய் தான் தமிழ்நாடு!” – வேலூர் மண்ணில் கிளம்பிய இந்த ஒற்றை முழக்கம் இப்போது ஒட்டுமொத்த அரசியலையும் உலுக்கி வருகிறது. தாங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டின் உண்மையான பிரதிநிதிகள் என்று மார்தட்டும் விஜய், தேர்தல் களம் என்பது ‘தமிழ்நாடு vs ஸ்டாலின் சார்’ அல்லது ‘விஜய் vs ஸ்டாலின் சார்’ என்று நேரடியாக முதலமைச்சருக்கே சவால் விடுத்துள்ளார். மாநில சட்டமன்றத் தேர்தலை ஏன் டெல்லி வரை கொண்டு செல்கிறீர்கள் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ள அவர், தன்னை பாஜக-வின் பி-டீம் என்று முத்திரை குத்த முயல்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சிறுபான்மையின சகோதரர்களை பயமுறுத்தி ஓட்டு வாங்கும் ஏமாற்று வேலைகள் இனி செல்லுபடியாகாது என்றும், தனது பேச்சைத் திரிப்பவர்கள் யாராக இருந்தாலும் தில்லுமுல்லு வேலைகள் பலிக்காது என்றும் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
