தஞ்சாவூரில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது உரையின் போது திமுக அரசின் இரட்டை வேடத்தை கடுமையாகச் சாடினார். “சென்னையில் இருந்துகொண்டு எதற்கெடுத்தாலும் டெல்லி டெல்லி என்று குறை கூறும் திமுக, அடிக்கிற கொள்ளைக்கு ரைடு என்று வந்துவிட்டால் மட்டும் அதே டெல்லிக்கு வெள்ளைக் கொடி பிடிப்பது ஏன்?” என்று நேரடியாகவே கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டைக் காப்பாற்றுவது நாங்கள்தான் என்று கூறிக்கொண்டு, உள்ளுக்குள் பயந்து நடுங்குபவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.