புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக பாரதிதாசன் பிறந்தநாள் விழா மற்றும் கலைமாமணி விருது வழங்கும் விழாவானது கம்பன் கலையரங்கில் நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி, துணை நிலைலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயல், இசை, நாடகம், நடனம், ஒவியம், நாட்டுப்புறக் கலை ஆகிய பிரிவுகளின் கீழ் 216 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இதில் தமிழிசை செளந்தரராஜன் பேசியபோது, தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடைபெறுகிறது என்று கூறினார்.