மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் நடிப்பில் கடந்த வருடம் ரிலீசான திரைப்படம் “கடுவா”. டைரக்டர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் நடிகை சம்யுக்தா நாயகியாக நடித்திருந்தார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி இருந்த இந்த திரைப்படம் ரூபாய்.50 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடுவா படத்தை தமிழில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. அதோடு இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. அந்த வகையில் கடுவா படம் வரும் மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.