தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தனக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (ஏப்ரல் 3) அதிரடியாக வெளியிட்டுள்ளது.
#BREAKING | 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது#SunNews | #BJPCandidates | #TNElectionWithSunNews pic.twitter.com/DJhJMeTSr2
— Sun News (@sunnewstamil) April 3, 2026
“>
டெல்லி மேலிடம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை மயிலாப்பூர் தொகுதியிலும், மத்திய அமைச்சர் எல். முருகன் அவிநாசி (தனி) தொகுதியிலும் களம் காண்கின்றனர். மேலும், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன், விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்தப் பட்டியலில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சீனியர் தலைவர்கள் மற்றும் முக்கிய முகங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள பாஜக-வின் இந்தப் பட்டியல், தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
