டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் பிரிட்டனில் உள்ள பிரபல ஆட்டோ நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய தலைமை செயலதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த P.B. பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அந்த நிறுவனத்தின் CEO-வாக உள்ள அட்ரியன் மார்டெல் அக்டோபர் மாதத்தில் பதவியில் இருந்து விலக உள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் பாலாஜி அதிகாரப்பூர்வமாக புதிய CEO-வாக பொறுப்பேற்கவுள்ளார்.
இதற்கு முன் ஹிந்துஸ்தான் யூனிலீவரில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றிய பாலாஜி, 2017ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் குழும CFO ஆக நியமிக்கப்பட்டு, தற்போது டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
