தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு என செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், 2021 ஆம் ஆண்டில் 8,500 கிலோ லிட்டர், 2022ல் 4500 கிலோ லுட்டர் மண்ணெண்ணெய் வழங்கிய மத்திய அரசு தற்போது 2300 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தமிழகத்தில் பல ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவும் என கூறப்படுகிறது.