
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையை பொருத்தவரை 60 ரூபாய்க்கு விற்பனையான புழுங்கல் அரிசி 68 ரூபாயாக உயர்ந்தது. வேகவைத்த அரிசி 70 ரூபாயாகவும், பாஸ்மதி அரிசி 120 ரூபாய்க்கும், பழுப்பு அரிசி 39 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கடந்த சில மாதங்களாக உயர்ந்த அரிசி விலை தற்போது குறைந்துள்ளது.
அரிசிக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நெல் வரத்து அதிகரித்துள்ளது. அரிசி விலை உயர்ந்த நாட்களில் தமிழக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏதும் வராது என்று ஏற்கனவே அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை எந்த ஒரு அரிசி தட்டுப்பாடும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது அரிசி விலை குறைந்துள்ளதால் ரேஷன் கடைகளில் இதற்கான தட்டுப்பாடு எதுவுமே வராது என்று அரசு தெரிவித்துள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.