தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் 90.69% பேர் ஆதாரை இணைத்துள்ளனர். குடிசைகளுக்கான மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் பலரும் தங்களது ஆதார் எண்ணை இணைக்கவில்லை. மேலும் விவசாயத்திற்கான மின் இணைப்பு வைத்திருப்பவர்களில் சுமார் 5 லட்சம் பேர் இன்னும் ஆதாரை இணைக்கவில்லை. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் நிறைவடைவுள்ள நிலையில் பிப்ரவரி 15-ஆம் தேதி இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை நிலவரப்படி 2.34 கோடி அதிகமான மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது. இதுவரை மொத்தமாக 87.44 சதவீதம் மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பதாகவும் இதுவரை இணைக்காதவர்கள் விரைவில் இணைத்திட வேண்டும் எனவும் அமைச்சர் பி.செந்தில் பாலாஜி ட்விட்டர் பக்கத்தில் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து பத்து சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி இருப்பதால் 15 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.