தமிழகத்தில் உணவு பாதுகாப்பு துறைக்கான பிரத்யேக இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு கைபேசி செயலியை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். உணவின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல்வரின் வழிகாட்டுதலின்படி உணவு பாதுகாப்புக்கான www.foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் tn consumer app என்ற கைபேசி செயலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். இதில் உணவு பாதுகாப்பு துறை குறித்து அனைத்து தகவல்களும் குறிப்பாக அனைத்து அமலாக அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள், உணவு ஆய்வகங்களின் முகவரிகள், அரசு உணவு பகுப்பாய்வு ஆய்வகங்களின் கட்டண விவரம் மற்றும் சுகாதாரக் கேடு விளைவிக்கும் உணவு பொருள்களின் தடை உத்தரவு ஆகியவை இடம்பெற்றிருக்கும். மேலும் உணவு தரன் குறித்து நுகர்வோர் புகார் கலை அளிக்க 9444042322 என்ற whatsapp புகார் என்னும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் பெறப்பட்டு 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.