தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளின் உள்கட்டமைப்பு விவரங்களை அதற்கான செயலில் இந்த மாதம் இறுதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள உள்கட்ட அமைப்பு விவரங்கள் அனைத்தையும் நேரில் பார்வையிட்டு SIDS என்ற செயலின் மூலமாக பொறியாளர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தற்போது வரையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் தொடர்ச்சியாக தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 50 சதவீதம் உள்கட்ட அமைப்பு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 சதவீத பள்ளிகளிலும் அனைத்து விவரங்களையும் மே மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் கோடை விடுமுறை நாட்களில் மீதம் உள்ள பள்ளிகளை பார்வையிட்டு பதிவேற்றம் செய்யும் வகையில் பொறியாளர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.