
தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஊட்டிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஊட்டியில் ஐந்து நாள் பயணம் மிக சிறப்பாக இருந்தது.
அதோடு மக்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. திராவிட மாடல் ஆட்சிக்கு நீலகிரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாவட்ட மக்களும் ஆதரவு கொடுக்கிறார்கள்.
ஆளுநர் விவகாரத்தில் ஜனாதிபதி விளக்கம் கேட்டது தொடர்பாக நான் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளேன். இது பற்றி மற்ற மாநில முதல்வர்கள் மற்றும் மந்திரிகளுடன் பேசி முடிவுகள் எடுக்கப்படும். மத்திய அரசாங்கம் தொடர்ந்து சர்வாதிகாரப் போக்கை கடைபிடித்து வருகிறது. மேலும் 2026 மட்டுமல்ல 2031 மற்றும் 2036 ஆகிய ஆண்டுகளிலும் கண்டிப்பாக திராவிடம் மாடல் ஆட்சி தான் அமையும் என்றார்.