
தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் அடுத்த ஆண்டுக்கான ஆயுட்காலச் சான்றிதழை மார்ச் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்க வரும்போது ஓய்வூதிய உத்தரவு ஆணை, ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றை எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஓய்வூதியதாரர்கள் 044-23455801 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.