நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சந்தித்த படுதோல்வி பெரும் விவாதமாகியுள்ள நிலையில், தேசியத் தலைவர் நிதின் நபினிடம் அண்ணாமலை அளித்துள்ள ரகசிய கடிதம் அரசியல் களத்தைக் சூடாக்கியுள்ளது. அந்த கடிதத்தில், சமீபகாலமாக தமிழக பாஜகவின் முக்கிய முடிவுகள் மற்றும் தேர்தல் வியூகங்களில் இருந்து தான் எவ்வாறு திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டேன் என்ற அதிர்ச்சி பின்னணியை அண்ணாமலை அப்பட்டமாக உடைத்துள்ளார்.

​மேலும், கள நிலவரம் தெரியாமல் செயல்பட்ட சில முக்கிய நிர்வாகிகளின் தவறான உத்திகளாலேயே கட்சி இந்த படுதோல்வியைச் சந்தித்தது என்றும், தனக்குரிய அதிகாரங்கள் முடக்கப்பட்டு தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி மேலிடத்திற்கு நேரடியாக இந்த புகார்களை அவர் கொண்டு சென்றுள்ளதால், தமிழக பாஜகவுக்குள் மிகப்பெரிய அதிரடி மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.