தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம்,மடிக்கணினி உள்ளிட்ட பல திட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் மாணவர்கள் மத்தியில் பெரும்பாலான அரசியல் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு எதுவும் இல்லை. என் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் நாகராஜன் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

அதன்படி தற்போது சாலை விபத்தில் இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர அரசு சார்பாக 75 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த உதவித்தொகை அந்த மாணவரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர் விபத்தில் உயிரிழந்து விட்டால் அவரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு சார்பாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.