தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு கடந்த வாரம் முதல் நடைபெற்ற வருகின்றது. இந்த நிலையில் டெட்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதாவது திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ளதால் இந்த பல்கலைக்கழக தேர்வு நாளில் டெட் தேர்வும் நடைபெற இருப்பதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனை கருதி பல்கலைக்கழகம் அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 19ஆம் தேதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெட்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் விண்ணப்பித்த சான்றுடன் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சைதாப்பேட்டை என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.