தமிழகத்தில் காலை உணவு சாப்பிடாமல் பல மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் பசியின்றி பள்ளிகளுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்க வைத்துக் கொள்ளுதல், மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்தல் வேண்டுமென அரசு வலியுறுத்தியுள்ளது.