தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த முறை பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு தேர்தலுக்கு முன்பாகவே திட்டத்தில் பயனாளர்களை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என கூறப்படுகிறது. புதிய குடும்ப அட்டைதாரர்கள், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதற்கு முன்பு விண்ணப்பிக்க தவறியவர்கள் இதன் மூலம் பயன்பெற முடியும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.