மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பொறுப்பேற்றதிலிருந்து டாஸ்மாக்கில் பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையின் போது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நேற்று கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு மது விலை உயர்வு குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. டாஸ்மாக்கில் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.