தமிழகத்தில் பள்ளிகளில் மாற்று சான்றிதழ் வழங்கும் போது பயிற்று மொழிச் சான்றிதழை சேர்த்து வழங்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இருவது சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதற்காக விண்ணப்பதாரர்கள் தாங்கள் படித்த கல்வி தகுதியுடன் எந்தெந்த வகுப்புகளில் தமிழ் வழியில் படித்தார்கள் என்பதற்கான பயிற்று மொழிச் சான்றிதழும் வழங்க வேண்டும்.

இதனால் தமிழகத்தில் அரசு துறை வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்போம் வெளிநாட்டு வேலைக்கு செல்வோரும் வயிற்று மொழிச் சான்றிதழ்களை தனியாக விண்ணப்பித்து பெற வேண்டிய சூழல் உள்ளது. எனவே பயிற்று மொழி சாற்றுகளுக்காக மாணவர்களை அலைய விடாமல் படித்து முடிக்கும் போது பயிற்று மொழி சான்றுகளை இணைத்து வழங்க பள்ளி கல்வித்துறையும் உயர் கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.