தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் என தொடர்ந்து விலை உயர்வு ஏழை எளிய மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது அரிசி விளையும் உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெளி மாநிலங்களில் இந்த அரிசி வரத்து குறைந்துள்ளதால் 25 கிலோ அரிசி மூட்டை 450 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிலோவிற்கு ரூ. 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரிசி விலை உயர்வை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் உடனே கட்டுப்படுத்த வேண்டும் என வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.