தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு மாவட்டம் தோறும் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12, 10ஆம் வகுப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்ற தேர்ச்சி பெரும் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் மற்றும் தனி திறன்களை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்பட்டு சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்தாம் வகுப்பில் 15 பேருக்கு தலா பத்தாயிரம் ரொக்க பரிசுடன் சான்றிதழ், பன்னிரண்டாம் வகுப்பில் 15 பேருக்கு தலா 20,000 ரொக்க பரிசுடன் சான்றிதழ் வழங்கப்படும். என் நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற தகுதியான மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பெயர் பட்டியலை பள்ளி கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.