தமிழகத்தில் கடந்த 2012 ஆம் வருடம்முதலே  நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு இப்போது வரைக்கும் பணம் நியமனம் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நேரடி நியமனை செய்யப்படாது எனவும் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மட்டும் தான் தகுதியான ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் உடனடியாக சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம் நட த்தி வந்த நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார். அதாவது தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறுவது கல்வி தகுதிகளில் ஒன்றாக மட்டுமே கருதப்படும். ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு கட்டாயமாக போட்டி தேர்வின் அடிப்படையில் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.