தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்ற கூட்டம் ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை எனவும், ஆளுநர் உரை வெற்று உரையாக இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார். ஆளுநரின் உரையால் மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மேலும் பேரவையில் ஆளுநரை வைத்து முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.