
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும் என ஆளுநர் உரையில் தகவல். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்புக்கான இட ஒதுக்கீடு 10 % அமல்படுத்தபடாது. இது சமூக நீதிக்கு எதிரானது என ஆளுநர் அரசு கருதுகிறது என ஆளுநர் உரையில்
ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்து கண்டனம் தெரிவித்தனர். வெளியேறு… வெளியேறு… ஆளுநரை வெளியேறு என திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை உடனடியாக கையெழுத்திட வேண்டும் என பாமக உறுப்பினர்கள் கோஷம் ஆன்லைன் சட்டமன்ற கையெழுத்திட வேண்டும் என வாசகத்துடன் சட்டப்பேரவையில் பாமக வலியுறுத்தல்.
ஆளுநர் உரையில் இடம்பெற்ற தமிழ்நாடு, திராவிடம், தமிழகம் அமைதி பூங்கா உள்ளிட்ட வாசகங்களை ஆளுநர் படிக்காமல் உரையை நிறைவு செய்தது தமிழக எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்குள்ளானது. இதை தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர்ஆளுநர் தமிழ்நாடு அரசின் சார்பில் தயாரித்துக் கொடுக்கப்பட்டிருந்த உரையை அப்படியே வாசிக்காதது வருத்தம் அளிப்பதாக பதிவு செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையில் தவிர்த்து படித்திருந்த பகுதிகள் அவை குறிப்பில் இடம்பெறாது. சபாநாயகர் அப்பாவு பேசிய பகுதிகள் மட்டுமே இடப்படும் என முதல்வர் பேசினார். அதனைத் தொடர்ந்து அவையில் இருந்த ஆளுநருக்கு அங்கிருந்தவர்கள் மொழி பெயர்த்து சொன்ன உடனே ஆளுநர் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். தேசிய தேசிய கீதம் பாடி அவை நடவடிக்கைகள் முடியும் முன்னரே ஆளுநர் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.