பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை கேட்டறியும் வண்ணம் தமிழ்நாடு அரசு சார்பாக முக்கிய அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. பொதுவாகவே பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை போலீஸ் அதிகாரிகளை சந்தித்து மனுக்களை வழங்கி வருகின்றனர். இதற்கிடையில் பல குறைகள் சரியாக விசாரணை செய்யப்படாமலேயே மனுக்கள் நிராகரிப்பு செய்யப்படுவதாக பொதுமக்களின் சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இதனால் உயர் அதிகாரிகள் பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அவ்வப்போது தமிழக அரசின் சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

எனினும் காவல்துறையின் சார்பாக இந்த நடைமுறை சரியாக பின்பற்றப்படாத நிலையில், தற்போது மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எம்பிக்கள் வாரத்தில் ஒருநாள் கட்டாயமாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யவேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை முதல் மாலை வரை மாநகர காவல் ஆணையர், மாவட்ட எம்பிக்களை ஆணையரகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் நேரில் சந்தித்து தங்களுக்கான புகாரை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.