சுகாதார ஆய்வாளர்களை நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள்:1,066

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்துவிட்டு, மாநில பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்கத்தின் 2 ஆண்டுக் கால பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி முடித்தவர்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு;  இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது.

விண்ணப்பதாரர்கள் mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.