
தமிழக முழுவதும் முதல் கட்ட பொறியியல் கலந்தாய்வு கலந்த வாரம் நடந்து முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று காலை 11:00 மணி முதல் செப்டம்பர் மூன்றாம் தேதி வரை பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகின்றது.
தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த கலந்தாய்வு குறித்த விவரங்களை மாணவர்கள் https://www.tneaonline.org/என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.